வந்தா கதாநாயகனாத்தான் வருவேன் அடம் பிடிக்கும் மைக் மோகன்

1980 களில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகன் தற்போதும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிப்பதால் பல நல்ல கதாபாத்திரங்களை இழந்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் 80 களில் மைக் பிடித்து பிரபலமானவர் மோகன், ஒரு தீபாவளிக்கு வெளியாகிய இரண்டு படங்களும் இவருக்கு வெள்ளி விழாவைக் கொடுத்தன. தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி இரண்டு வெள்ளி விழா படங்களை ஒரு நேரத்தில் கொடுத்தவர்கள் எவரும் இல்லை.

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர். கன்னடமலையாளதெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார்.  தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் எனவும்  அழைக்கப்பட்டார்,

கமல், ரஜினி இருவருமே வெளிப்படையாக தங்கள் பயத்தை  வெளிப்படுத்தும் அளவுக்கு இவர் படங்கள் தொடர்ந்து வெள்ளி விழா கொண்டாடின, மோகன் போற வேகத்தைப்  நினைத்தால் நம்ம மார்கெட் சரிந்து போய்விடுமோ என பயமா இருக்கு என சூப்பர் ஸ்டாரே பயந்த காலமும் உண்டு,

சில பிரச்சனைகளால் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதை அறிந்த பலர் அவரை தேடிச் சென்று கதை சொல்கிறார்களாம். இதில் பல நல்ல கேரக்டர்களாம். இவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்கின்றனர்.

ஆனால் அவரோ தன்னிடம் கதைக் கூற வரும் இயக்குனர்களிடம் எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு. வந்தா கதாநாயகனாத்தான் வருவேன் என சண்டையிட்டு அனுப்பி வைக்கிறாராம். இதனால் இவரே இனிமேல் வலிய போய் கேட்டாலும் யாரும் வாய்ப்பு கொடுக்கும் மனநிலையில் இல்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here