நெகிரி மாநிலத்தில் அபாயகட்டத்தில் டிங்கி

சிரம்பான் (பெர்னாமா) :  நெகிரி செம்பிலானில் ஜனவரி முதல் மே 23 வரை பதிவான டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 1,020 வழக்குகளில் இருந்து 11.6 விழுக்காடு  அதிகரித்து 1,138 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் குழுத் தலைவர் எஸ்.வீரப்பன் 21ஆவது வாரத்தில் மட்டும் மே 17 முதல் மே 23 வரை மொத்தம் 64 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிரம்பானில் ஆக அதிக எண்ணிக்கையில்  937 சம்பவங்கள் பதிவாகியுள்ளது, போர்ட்டிக்சன் (48), ரெம்பாவ் (47), தம்பின் (38), ஜெம்போல் (33), கோலா பிலா (19), ஜெலெபு (16) ஆகிய பதிவு செய்யப்பட்ட சம்பவங்களாகும்.

டிங்கி காரணமாக ஒரு மரணம் சிரம்பானில் பதிவாகியுள்ளது, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஐந்து இறப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே 23 ஆம் தேதி வரை இறப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. என்று அவர் வியாழக்கிழமை (மே 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிரம்பானில் 21  உள்ள இடங்களும், ரெம்பாவ் மற்றும் கோலா பிலாவில் தலா ஒரு இடமும் இருப்பதாக அவர் கூறினார். இயக்க கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறையில் இருந்தபோதிலும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன, குறிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சுத்தம் செய்தல், லார்விசைடிங், ஃபோகிங் மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துப்புரவு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன  என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here