விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் சசிகுமார்

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துவந்தார்.

நடிகர் விஜய்யை வைத்து சரித்திர படத்தை இயக்க சில ஆண்டுகளுக்கு முன் சசிகுமார் முயற்சித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப்பட வேலைகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய்யை வைத்து சரித்திர படத்தை எடுப்பேன் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் “எனக்கு வரலாற்று காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் வரலாற்று கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்த கதையை விஜய்யை வைத்து படமாக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தார். ஆனால் வேறு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை. படத்துக்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த படத்தை விஜய்யும் நானும் சேர்ந்து எடுப்போம்“ என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here