ஊதும் புகையால் ஆயுள் குறையும்!

மலேசிய சுகாதரத்துறையின் வார்த்தைகளை மக்கள் காது கொடுத்துக் கேட்டால் மருத்துவமனைகள் அதிகம் முளைத்திருக்காது. அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்காது. குறிப்பாக மனிதர்களுக்குப் புத்திமதி என்பது கசக்கும் கொய்னா போன்றதாகவே இருக்கும். அதனால் கசக்கும் மருந்தைப்போலத்தான் அறிவுரையை நினைப்பார்கள். புகைக்கும் விஷயத்திலும் அப்படித்தான்.

புகைக்கும் விஷயத்தில் புரிதல் என்பது பூஜியம் விழுகாடுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். புகைப்பதில் எந்த நன்மையும் இல்லை என்றால் சிகரெட் நிறுவனங்களை ஏன் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கெல்லாம் பதில் கிடையாது. பதிலை எதிர்பார்த்தால் கடல் வற்றிப்போகும்வரை காத்திருக்க வேண்டிவரும். அப்படி நடப்பது ஏழு அவதாரம் எடுத்தாலும் நடக்கப்போவதில்லை.

இதில் சுய முடிவுதான் முதன்மையாக இருக்க வேண்டும். சுய முடிவு என்பது சுப முடிவாக  இருக்க வேண்டும். சுபம் என்பது நன்மை பற்றியதாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

சிகரெட் என்ன செய்யும்? அதைத் தொடாதவரை தீங்கு அருகே வராது. தொட்டால் அது நம்மை விடாது. தொடுவதால் நுரையீரல் பாதிக்கும் என்பது உறுதி. புகைப்பது தொடர்ந்தால் ஆயுள் குறைவதும் உறுதி. புகைப்பவர்களுக்கு இது தெரியும்.

மனிதனுக்கு முக்கியமானது நுரையீரல். அது கெட்டுப்போனால் மருத்துமனையில் கட்டிலும் உறுதி. நுரையீரல் பலமற்றுப்போனால் நோய்களுக்கு மிகவும் விருப்பம். இதிலிருந்து மீளும் வழிகளைத்தான் சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. ஆனால், இக்கருத்தில் பலர் செவிடர்களாக இருந்தால், பழியை யார் மீது போடுவது? சிகரெட் தயாரிப்பு நிறுவனகள் அதிகம் புகைப்பவர்களைத்தேர்வு செய்து மாதாந்திரத்தொகை கொடுப்பதில்லை. மாறாக மரணத்திற்கு வழிகாட்டுக்கின்றன. இது தெரிந்தும் அந்நிறுனங்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது யாருடைய தவறு? புகப்பவர்களின் அறியாமை. மெல்லச் சாகடிக்கும் 6000 ஆயிரம் வகை ரசாயனத்தை அழகாகச் சுருட்டி வெண்சுருட்டு என்று தருகிறார்கள்.  இவர்கள் அனுமதி பெற்ற கொலையாளிகள்  என்றாலும் தகும். இக்கொலையாளிகள் சிகரெட்டுகளைத் தயாரிக்கும் உரிமைகளைப் பெற்றிருகின்றனர். தீங்கென்று தெரிந்தும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.   

தெருவோரம் பெட்டிக்கடைபோட்டால் மாபெரும் குற்றம் என்று பிடுங்கி வீசுகிறார்கள். ஒர் ஏழையை  வாழவைக்கும் பெட்டிக்கடை பிடுங்கப்படுகிறது. லட்சகணக்கில் கொலை செய்யப்படும் சிகரெட்டுகள் கோலோச்சுகின்றன. இதன் பேர் அரசியல். இது கொலை வணிகம்.

பிள்ளை கிள்ளிவிடப்படுகிறது, சுகாதாரத்துறை சிகரெட் புகைப்பதை எச்சரிக்கிறது. எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கின்றன.

மனிதனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் சிகரெட் புகைப்பதை நிறுத்த முடியாது. யார் மீதேனும் பழிபோடுவதை நிறுத்திவிட்டு, புகைப்பவர்களே திருந்தவேண்டும். இல்லாவிட்டால் சிகரெட் விற்பவர்களே வாழ்வார்கள், புகைப்பவர்கள் வீழ்வார்கள்.

கொல்லத் துணிந்து, கொடுவிஷம் தருகின்றவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்? புகையை நிறுத்துவதே முதல் தண்டனை. பிறகு ………?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here