ஆண், பெண் என இருவருக்கு மத்தியில் ஏற்பட்ட கைகலப்பு இறுதியில் கொலையில் வந்து முடிந்தது. இங்குள்ள அம்பாங் தாமான் மேலூரின் வீடு ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால் அவ்வட்டாரமே பரபரப்பானது.
அவ்விருவரும் சக நண்பர்களுடன் அவ்வீட்டில் தங்கி வந்துள்ளனர். நேற்று அவ்வீட்டிற்குள் சீன ஆடவர் ஒருவர் மதுபானங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். அதன் பின்னர் கடுமையான் மழை பெய்ததால் அவ்வீடில் நடந்த சம்பவம் குறித்து ஒரு சத்தமும் கேட்கவில்லை என்று அங்குள்ளவர்கள் கூறினர்.
சம்பந்தப்பட்ட இருவருக்கும் அவ்வீட்டில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அது கொலையில் முடிந்துள்ளது. இறந்த பெண்ணின் கழுத்தில் நெறிக்கப்பட்ட அடையாளம் இருந்துள்ளது. அவ்வீட்டில் இருந்த சக நண்பர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வீட்டில் இருந்த அனைவரையும் விசாரித்த பின்னர் கொலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை கைது செய்தனர். அதோடு இக்கொலை குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.