டிரோன் வரவு புத்துயிர் ஊட்டட்டும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நம்நாட்டு எல்லைக்காவல் படை  இரண்டுக்கும் ஒரே தகுதிதான் என்பது கிண்டலாகத் தோன்றலாம். அது கிண்டல் அல்ல.

மலேசிய எல்லைக் காவல் இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போலவே செயல் படத்தொடங்கிவிட்டது. என்பதுதான் விந்தை.

நமது எல்லைக்காவல் படையை ஒப்பிடுவத்ற்கு அவரே சரியானவராக இப்போது தென்படுக்கிறார். தீவிரக் கண்காணிப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்பு, நாட்டிற்குள் கள்ளத்தனமக வந்தவர்களாலும் பிரச்சினை. நல்லத்தனமாக வந்தவர்களாலும் பிரச்சினை.

நல்ல பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக கொடூர நோயைக் கொண்டுவந்து குவித்து விட்டார்கள். இதை அறிந்த உடனே கிள்ளியிருந்தால். கோரோனா பெருமளவில் துள்ளியிருக்காது. கொஞ்சம் அசந்துவிட்டதால் ஏற்பட்ட அனுபவம் மருத்துவத்தையே அசைக்கத் துணிந்துவிட்டது.

பின்புற வழியாக வருகின்றவர்கள்  எலி வலையில் நுழைந்தவர்கள். இவர்களாலும் பிரச்சினைகள். இருபக்கத்திலும் இடி. ஊழல் ஓசை ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது வான் வெளியும் நம்மை சும்மா விடவில்லை. அது வழியாகவும் விசா இன்றி நுழைந்ததது தொற்று.

ஒற்றனைப்போல் நுழைவதில் நமது பார்வையின் தூரம் எட்டவில்லை. எலிவலை என்று தெரிந்திருக்கிறது, அது மூடப்படவில்லை என்பது பலவீனம். தொற்று முற்றிய போதுதான் அமெரிக்க அதிபர்போல் கயிறு இறுகிற்று.

டிரோன் இக்கால கண்டுபிடிப்புகளில் உயர்வாய் இருக்கிறது. இதன் பயன்பாடு அதிகமாக உதவப்போகிறது.

எப்போதுமே ஒருவினைக்கு எதிர்வினை இருக்கும் என்பார்கள். அது கதையல்ல பல வேளைகளில் அதன் உண்மை உணரப்பட்டிருக்கிறது. ட்ரோன் நிலைமையும் அதுதான்.

இதில் கள்ளர்களின் உபயோகம்  இன்னும் கூடுதலாக இருக்கும். ட்ரோன் பயன்பாடு தீயவர்களின் கைக்கும் போகலாம். அப்போது எலி வலைகள் ஏலியன் வலையாக மாறலாம்.  வானத்தில் வட்டமடிக்கவும் நிலையம் அமைக்கவும் இடம் தேட புதிய யுக்திகளைத்தேட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here