‘பாரத பூமி’

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றி வருகின்றனர்.

அவர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா ‘பாரத பூமி’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இளையராஜா எழுதி, இசையமைத்துள்ள இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இளம்வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள லிடியன் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களை இளையராஜாவின் மேற்பார்வையில் இசைத்துள்ளார். இப்பாடல் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாடியுள்ளார்.

இதுவரையில் கண்டிராத வகையிலான கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று போராடுபவர்களுக்கும் ஒன்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இந்த பாரத பூமி பாடல் பெருமை சேர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here