கோவிட் 19- இன்று 38 பேர் பாதிப்பு

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு இன்று 38 பேர் இலக்காகியுள்ளனர்.

இதில் 26 பாதிப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 6 பாதிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டதாகும்.

இன்று மொத்தம் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,404 ஆக பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,857 ஆக உயர்ந்துள்ளது.

1,338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவைப்படுகின்றன. மரண எண்ணிக்கை 115ஆகவே நீடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here