சுழன்றடிக்கிறது சுகாதாராம்

சுகாதாரம் என்பது இப்போது பலருக்குப்புரிய ஆரம்பித்திருக்கிறது. இதைத் தெரிந்துகொள்வதற்கு ஏதாவது நேர வேண்டுமா? அப்படித்தான் தெரிகிறது. குறிப்பாக, தீங்கு நேர்ந்தால்தான்  சுகாதாரம் முன்னே வரும்போல் இருக்கிறது . இல்லையென்றால் சுகாதாரம் ஒரு மூலையில் அடங்கிக்கிடக்கும்.

இப்போது சுகாதாரம் குளத்தில் தெரியும் தாமரப்பூவாய் உயர்ந்து நிற்கிறது. பல முன்னணிப் பணியாளர்கள் பற்றியெல்லாம் தெரிய வந்திருக்கிறது என்றால் தீங்கு நடந்திருக்கிறது என்பதாக அறிந்துகொள்ளலாம்.

இப்போது அனைவருக்கும் சுகாதாரம் புரிய ஆரம்பித்திருருக்கிறது என்பதை பல நடவடிக்கைகள் மூலம் உணர்த்துகின்றன.

சுகாதாரத்தை யாரும் கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை. அது இயல்பாகவே மனித வாழ்க்கையோடு கலந்திருக்கிறது. ஆனாலும் அதை மேம்படுத்திக்கொள்ள யாரேனும் தேவை. சுகாதார மேம்பாட்டுக்கும் சுகாதாரம் தேவை என்ற நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் சுகாதாரமாக இருக்கிறார்கள். ஆனால், சுகாதாரம் சுகமாக இருக்கிறதா? இதுதான் தெரியவில்லை.,முகக்கவசம் அணிகிறார்கள். அது பாதுகாப்பு.  அதுவரை சரி. இதில் முகக்கவசம் பாதுகாப்பானதா? என்ற கேள்வியும் எழுகிறது.

நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். இதில்தான் சுகாதாரத்திற்குச் சுகாதாரம் தேவைப்படுகிறது. மக்கள் சுகாதாரமாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதாக அர்த்தமில்லை. முகக்கவசம் அணியும் முறையால் சுகாதாரம் பாழ்பட்டுவிடுகிறது என்பதைப் பலர் உணரவில்லை. இதை உணராத வரை யாரும் சுகாதாரமாக இல்லை என்பதை சுகாதாரமே ஒத்துக்கொள்ளும் உபயோகப்படுத்தும் முறை இன்னும் ஒழுங்குபடவைல்லை.

ஒரு தொற்றாளர் தும்மினால் தும்மலின் தூரம் 20 அடிக்கும் மேல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் என்றால், மக்கள் கூடல் இடைவெளி தூரம் மூன்று மீட்டர் போதுமா? இதில் சுகாதாரமிருக்கிறதா? இதைத்தான் கூடுதலாக அறிந்துகொள்ள வேண்டும். இதை மக்களே உணர்ந்து தூர விலகிக்கொள்ளவேண்டும்.

முகக்கவசங்கள் விற்கும் ஒருவர், முகக்கவசங்களைத் தொட்டுப்பார்த்துத் தேர்வு செய்வதை கவனித்து, ஒவ்வொரு முகக்கவசத்துக்கும் பிளாஸ்டிக் கவர் செய்திருப்பதாகச் செய்தியிருக்கிறது. இப்படிச்செய்வது  சுகாதார மேன்மை. பொருளை விற்றோம் , முடிந்தது வியாபாரம் என்பதோடு அல்லாமல், தொடுவதில் நோய் வந்துவிடக்கூடாதே என்பது சுகாதாரம்.

இதுபோன்ற சிந்தனைக்கு மக்கள் மாறவேண்டும். அப்போதுதான் சுகாதாரம் மரியாதைக்குரியதாக இருக்கும். கட்டாயதிற்காக முககக்வசம் அல்ல. கடுமையான் பாதுகாப்புக்காக என்ற அச்சம் மனத்தில் எப்போதும் இருக்கவேண்டும்.

சுகாதாரம் மற்றவர்களுக்கானது அல்ல. நமக்கானது. சுகாதாரம் நம்மிடம் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here