முருகப்பெருமானின் கையில் உள்ள வேலின் உண்மைப் பொருள் என்ன?

தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் தன் கையில் வேல் ஏந்தி இருப்பார். அவர் ஏந்தி இருக்கும் வேல், மேற்பகுதியில் மிகக் கூர்மையாகவும், இடையில் அகலமாகவும், முடிவில் ஆழமாகவும் இருக்கும்.

கூர்மை – அறிவானது கூர்மையாக இருத்தல் வேண்டும். எதிலும் தெளிவாக இருக்க வேண்டும். மொக்கையான எண்ணம் வீணானது. அகலம் – மிகவும் அகன்ற எண்ணம் இருக்க வேண்டும். அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும். குறுகிய எண்ணம் கூடாது. ஆழம் – எதிலும் ஆழ்ந்த எண்ணமும் அறிவும் தேவை. எதைக் கற்றாலும் ஆழமாகக் கற்க வேண்டும். மேலோட்டமான எண்ணமும் அறிவும் பயன்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here