வலிமையின் நிறம்

தூரல் விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். அந்த வார்த்தைக்கு இன்றளவும் உயிர் இருக்கிறது என்பதை வானமும் நிரூபிக்கிறது. நோய்களும் நிரூபிக்கின்றன. நோய்க்கான கிருமிகளும் நிரூபிக்கின்றன. வலிமை என்பது  முகம்காட்டும் கண்ணாடியாகவும் செயல்படுககிறது.

ஆண்டவன், அற்புதமான வரப்பிரசாதமாக வரம் ஒன்றை வலியாக உயிர்களுக்கு வழங்கியிருக்கிறான் என்பது மிகப்பரிய கண்டுபிடிப்பு அல்ல, உண்மையின் வெளிப்பாடு. வலியின் வலிமை மிகப்பெரியது என்பார்கள். இதை அனுபவித்தவர்கள் வலிமை மிகுந்தவர்கள் பட்டியிலில் இருக்கிறார்கள்.

அவர்களில் தாய்மைப் பேறடைந்தவர்கள் உலகின் வலிமைசாலிகள் எனவும் போற்றப்படுகின்றனர். ஒரு குழந்தையின் பிறப்பே வலிதான். அதைத் தாங்ககிக் கொள்ளும்போது வலிமைப் பெற்றவர்களாக பெண்கள் மாறிவிடுகின்றனர்.

உலகின் ஆய்வுகளில் பெண்களே வலிமையில் முதலிடம் பெறுகின்றார்கள். அவர்களே வலிமை மிக்கவர்களாக இருக்கிறர்கள். ஆனால், அந்த வலிமை குழந்தைப் பேற்றுக்குப்பின் அடங்கிவிடுகிறது. இந்த அடக்கம் தாய்மைக்குள் தஞ்சம் அடைந்ததும் வலி மறைந்து விடுகிறதா? இல்லவே இல்லை. அது அடங்கியிருக்கிறது. அது பயம் அல்ல, பக்தி.

தாய்மை அடைவதன் உச்சம் வலியின் எச்சம் என்றாலும் தகும். இங்கே எச்சம் என்பது குழந்தையாகிவிடுகிறது. குழந்தை என்பது வலி மாத்திரை. தாங்க முடியாத வலியைக் குறைக்கும் மந்திரம்.

ஒருபெண்ணை தய்மைக்கு மாற்றும் திறன் குழந்தைக்கு மட்டுமே உண்டு. அதற்கான நன்றிக்கடனை வலிதாங்கிச் செலுத்தக்கூடியவள் தாய்.

ஒரு மனிதனை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அவனுக்கு ஏற்படும் நோய்த் தன்மையை உணர்த்துகின்ற ஓர் உன்னத அலாரம்தான் வலி. வலியை உணரமுடிந்ததும் எச்சரிக்கை மணி மூளையில் அடிக்கப்படுகிறது. அதற்கான் வேலையைக் கவனி என்று எச்சரிக்கை செய்வதுதான் வலியின் வேலை. வலி அதிகரிக்கும்போது எங்கு செல்ல வேண்டும், என்ன செய்யவேண்டும் என்று வலி உணர்த்துகிறது.

வலியைத்தாங்கிக் கொள்ளும் சக்தியை உடல் பெற்றிருக்கிறது. சில வேளைகளில் தாங்க முடியவில்லை என்று வாய்வார்த்தை விழுந்தாலும். வலிக்கு விளங்காது. அப்படிப்பட்ட வலி உடலில் இருக்கிறது. உடலில் எங்கு இருக்கிறது.

துன்பம் ஏற்படும்போது கண்ணீர் துடைக்க ஓடி வரும் ஓர் உணர்வுதான் வலி. அதன்மீது கோபம் வரும். ஆத்திரம் வரும். எரிச்சல் கூட வரும்.

நாட்டின் முன்னணியாளர்கள்போல் வந்து நிற்கும் வலிமையைப்போல் உயர்ந்த நண்பன் எவரும் இருக்கமுடியாது.

வலையத் தாங்கிக்கொள்ளும்வரை உடனிருக்கும் வலிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். வலியால்தான் வலிமையும் வளமையும் வெளிப்படுகிறது.

வலிதான் பெரியது. வலிமை அடக்கமாக இருக்கும். அதன் வேலை வலிமை மிக்கது சிலருக்குப்ப்ரியாது, வலிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here