பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை சமீபத்தில் பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.
மேலும் அதுகுறித்து நடிகை சிம்ரன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். சந்திரமுகி 2ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக பரவும் செய்தி போலியானது. அந்த படத்தில் நடிக்கும்படி இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.