சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்

பீகாரின் முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்ப முயற்சித்த வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவ முன்வந்துள்ளார். அவர் நடத்திவரும் மீர் பவுண்டேசன் மூலமாக அக்குழந்தைக்கு அவர் உதவியுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அந்த சிறுவனை தொடர்புகொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். இந்த எதிர்பாராத இழப்பை தாங்கும் வலிமை அவனுக்கு கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அந்த வலி எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். எங்கள் அன்பு மற்றும் ஆதரவு எப்போதும் அந்த சிறுவனுக்கு உண்டு என்று அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here