அப்படி இருந்த நீயா இப்படி ஆகிட்ட..நடிகை சாரா அலி கான்

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், அவரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான அம்ரிதா சிங்கின் மகளான சாரா பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டார். நடிக்க வரும் முன்பு சாரா அலி கான் குண்டாக இருந்தார். தனக்கு நடிப்பு எல்லாம் செட்டாகாது என்று அவரே ஒரு முடிவு செய்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார்.

பெரிய கண்ணாடி அணிந்து குண்டாக இருந்த சாராவுக்கு அம்மா, அப்பா, பாட்டி சர்மிளா தாகூர் போன்று படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். சாரா ஒல்லியான பிறகு அவரை பார்த்தவர்கள் அப்படி இருந்த நீயா இப்படி ஆகிட்ட என்று வியந்தார்கள்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சேர்ந்து கேதர்நாத் படத்தில் நடித்தார் சாரா. அவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமான கேதர்நாத் பிரச்சனையில் சிக்கியது. அதை பார்த்தவர்கள் அப்படி என்றால் சாராவின் கெரியர் அவ்வளவு தானா என்று பேசத் துவங்கினார்கள். ஆனால் பிரச்சனை தீர்ந்து படம் வெளியாகி சாராவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தை பார்த்தவர்கள் சாரா நடிப்பதற்காகவே பிறந்தவர் என்று பாராட்டினார்கள்.

அடுத்ததாக சாரா ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சிம்பா படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. பின்னர் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து சாரா நடித்த லவ் ஆஜ் கல் படம் இந்த ஆண்டு வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. சாரா வருண் தவானுடனுக்கு ஜோடியாக கூலி நம்பர் ஒன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

லாக்டவுனுக்கு முன்பு சாரா ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் தனுஷ், அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லாக்டவுனால் வீட்டில் சும்மா இருக்கும் சாரா தன் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை தேடிக் கண்டுபிடித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.

மேலும் தன் தம்பி இப்ராஹிம் அலி கானுடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களையும் போஸ்ட் செய்கிறார். இந்நிலையில் சாரா தான் குண்டாக இருந்து ஒல்லியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் சாராவை பாராட்டியுள்ளனர்.

குண்டாக இருந்ததை சாரா ஒருபோதும் குறைவாக நினைக்கவில்லை. அதனால் தான் தன் பழைய வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுகிறார். மேலும் சாரா தன் அம்மாவுடன் சேர்ந்து கோவில்களுக்கு சென்றால் தான் சமூக வலைதளவாசிகள் அவரை விளாசித் தள்ளுகிறார்கள். ஒரு முஸ்லீமாக இருந்து கொண்டு கோவிலுக்கு போகலாமா, இப்படி உடை அணியலாமா என்று திட்டுகிறார்கள்.

யார் திட்டினாலும் திட்டட்டும் என்று சாரா அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை. தான் கோவிலுக்கு சென்றால் அதை தவறாமல் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துவிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here