உறங்கும் நேரத்திலும் ஓய்வின்றி உழைப்பு

மலேசிய தீயணைப்புத் துறையின் உழைப்பு முதலிடத்தில் இருக்ககிறது. முன்னணி பணியாளர்களை ஒப்பிடும்போது சளைத்தது அல்ல என்பதை நிச்சயம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

சுகாதாரத்துறை ஓய்வில்லாமல் கடமையுணர்ந்து பணியாற்றுவதால் மக்கள் நடமாட்டம் இலகுவாகியிருக்கிறது. அதுபோலவே தாதியர்களின் பணியும் தியாகமும் மதிக்கப்படுவதாய் இருக்கிறது.

காவல்துறையின் பணியும் முதன்மையாக்கப்பட்டிருக்கிறது. இவற்றை மக்கள் நேரில் கண்டிருக்கின்றனர். உணர்ந்திருக்கின்றனர். மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு சிறப்பான காரணமேதும் இல்லை. கடமை அவர்களுக்கு இயல்பானது. மலேசியர்களின் தன்மையே இதுதான் என்பதால் இதற்குக் காரணங்கள் என்று தனியாக ஏதும் முத்திரையிடவில்லை.

கொரோனா என்பதன் காலம் தணிந்து வருகிறது என்பதற்கு இவர்களின் உழைப்புதான் முதன்மைக் காரணம். இவர்களின் உழைப்பு முடிவடைந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது என்பதை தீயணைப்பு வீரர்கள் நினைவுப்படுத்திவருகின்றனர்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி தளர்த்தப்பட்டு தொழில்துறைகள் 70 விழுக்காடுவரை இயல்பு நிலைக்கு மாறியிருப்பதாக கூறப்டுகிறது. இது நல்ல அறிகுறி என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தொழில்துறைகள் திறக்கப்படும் இவ்வேளையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகத் திறக்கப்படாமல் இருந்த அலுவலகங்கள் எந்த அளவு பாதுகாப்பானவையாக இருக்கும் என்பதையும் அறியுமாறு தெரிவித்திருக்கிறது.பரிசோதிப்பது பாதுகாப்புக்கு உகந்தது.

பொருட்கள், நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும்போது உயர்கட்டடங்களின் புறவழிகள் செயல்படுவதைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருப்பது பொறுப்பின் கடப்பாடு. பணியின் பொறுப்பான செயல்.

இதுபோலவே தீயணைப்புக்  கருவிகள் காலாவதியாகிருக்கலாம். மின்னியல் சாதனங்களின் இயங்குநிலை பரிசோதக்கப்படவேண்டியது மிக அவசியம்.

புழக்கத்தில் இல்லாதபோது கட்டடங்கள் சீதோஷ்ண நிலையால் மாறுபட்டிருக்கும். அதன் இயங்கு தன்மை நிச்சயம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும். இவற்றையெல்லாம் சோதித்துக் கொண்டால் பல இழப்புகளைக் காப்பாற்ற முடியம். சொத்துகளைப் பாதுகாக்க முடியும் என்ற முன்யோசனையைக் கூறியிருப்பது முன்னணிசேவைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தீயவர்களும் சேதமேற்படுத்தியிருப்பார்கள்.

தீயணைப்பு என்பது தீயை அணைப்பது மட்டுமல்ல. தீயவற்றைத்தடுப்பதும் கடமையாகக் கருதுவதால், தீயணைப்புத்துறைக்கு நன்றிசொல்லத்தான் வேண்டும்.

உறங்கும் நேரத்திலும் ஓய்வின்றி உழைக்கும் துறைகளில் தீயணைப்புத் துறையே முதன்மையாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here