சிகரெட் கடத்தல் முறியடிப்பு

பாசிர்கூடாங் –

அரச மலேசிய சுங்கத்துறை நடத்திய இரண்டு சோதனைகளில் பாசீர்கூடாங் துறைமுகத்தில் 171 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சிகரெட்டுகளைக் கைப்பற்றி சிகரெட் கடத்தல் கும்பலை முறியடித்தது.

ஜோகூர் உதவி சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜொஹாரி அலிப்பா 18ஆம் தேதி நடத்திய சோதனையில் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 44 ஆயிரத்து 810 பெட்டி வெள்ளை சிகரெட்டுகளும் கெரெத்தெக் சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

இதற்கு செலுத்தப்பட வேண்டிய வரிக் கட்டணம் 60 லட்சம் வெள்ளியாகும்.
19ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 53 ஆயிரம் பெட்டி சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு 10 லட்சத்து 48 ஆயிரம் வெள்ளியாகும். செலுத்தப்பட வேண்டிய வரி 80 லட்சம் வெள்ளியாகும் என டத்தோ ஜோஹாரி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here