பொதுப் பணி துறை துணை அமைச்சர் பதவி விலகினார்

பொதுப் பணி துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட் சாலே பதவி விலகுவதாக அறிவித்தார்.

அண்மையக் காலமாக அவர் பதவி விலகுவார் என்ற பேச்சு காட்டுத் தீ போல பரவி வந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தாம் இன்று பதவி விலகியதை அவர் உறுதிப்படுத்தினார்.

கடந்த 14ஆவது பொது தேர்தலில் தாம் போட்டியிட்ட தொகுதியான ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற மக்களை முன்னிறுத்தி தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். மேலும் மக்கள் தம்மை பக்காத்தான் ஹராப்பான் மூலமே தேர்வு செய்தனர் என்பதையும் நினைவுக் கூர்ந்தார்.

தமது தவற்றை திருத்திக் கொள்வதற்கு முதல் கட்டமாக பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவம் தமக்கு வழங்கிய துணை அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பெர்சத்து கட்சியை சேர்ந்த  டத்தோ ஷாருடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here