சுற்றுலாத்துறைக்கு மருட்டல்

சுற்றுலாத்துறை முடக்கத்தால் மக்கள் தெம்பிழந்து கிடக்கின்றார்கள் என்பது உண்மை. ஆனாலும், மக்கள் நலம் முன்னிற்பதால் சுற்றுலாத்துறைக்கு மருட்டல் வந்துவிடக்கூடாது என்பதும் நியாயத்தின் பிடியாகவும் இருக்கிறது.

ஆற்றைக் கடக்க வெண்டும் என்றால் வெள்ளம் ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது. புயலைப் பற்றியோசிக்கலாம். இப்போது புயல் இல்லை. வெள்ளம் கூடுதலாக இருக்கிறது. நீந்தத்தெரிதிருக்க வேண்டும் அவ்வளவுதான் ஆற்றைக்கடந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. மலேசியச் சுற்றுலாத்துறை அப்படித்தான் இருக்கிறது.

சுற்றுலாத்துறை செயல்படாமல் இருப்பதால், அதன் பின்னணியில் இயங்கும் பல தொழில்கள் இன்னும் எழமுடியாமல் இருக்கின்றன. அதனால், வேலைமுடக்கம் அதிகமாக இருக்கின்றன.

பணியாளர்களுக்கு வேண்டியது வேலை, அதன் தொடர்பில் வருமானம், இதுதான் முக்கியம். இதற்கு வழிபிறக்க வேண்டும். இதற்கான தொடக்கம் மிக அவசியமாகிறது..

ஆபத்தில்லாத, செல்லக்கூடிய நாடுகளைப் பட்டியலிடப்பபடவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அனைத்துலக நாடுகளின் வாய்ய்புகளைச் சிறிதாக தொடங்கலாம் அப்படித் தொடங்கினால் சுற்றுலாத்துறை மெல்ல மூச்சுவிடும்.

முதலில் உள்ளுர் எல்லைகள் திறந்துவிடப்படவேண்டும். அதற்கான கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுடன் திறந்து விடப்பட்டால் அடுத்தடுத்த எல்லைகள் அருகிவரும். சுற்றுலாவின் அடுத்த கட்ட நகர்வுக்கு இது உதவும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மீண்டும் நம்பிக்கை துளிர்விட வேண்டும்.

இப்போது, உள்ளூர் சுற்றுலாவை குறுகிய கால சுற்றுலாவாக மாற்றலாம். புதிய தொடாக்கம் உருவாக இதுநல்ல முயற்சியாக இருக்கும்.

அனைத்துலகப் பயணத்திற்கு ஏற்ற நாடுகளும் இருக்கின்றன. சீன மக்களின் பயண உணர்வுக்கு சீனா, தைவான், வியட்னாம் நாடுகள் இப்போது பாதுகப்பாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது. அதே போன்று அந்த நாட்டு மக்களும் இங்கே வர கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கலாம்.

இதில் பாதுகாப்பு அம்சங்கள்  செல்லும் இடங்களுக்கான வழிகாட்டல்கள் குறித்த கையேடு வழங்கப்படவேண்டும்.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்புகள் அதிகம். ஆனாலும் இயங்கத் தொடங்கினால் புத்துயிர் பெற வாய்ப்பிருக்கும். சுற்றுல்லாத்துறை முன்புபோல் வரும்வரை புதிய முயற்சிகள் வேறு பரிணாமத்தைக் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here