‘பப்ஜி’ ஆட்டத்தில் சிலை வழிபாடா? இணையத்தில் எழுந்தது சர்ச்சை

இன்றைய இளைஞர்களால் பரவலாக ஆடப்பட்டு வரும் ‘பப்ஜி’ (PlayerUnknown’s Battlegrounds (PUBG) ஆட்டத்தின் ஒரு பகுதியாக நியூ சிலாந்து நாட்டின் மவோரியர்களின் தெய்வம் போல காட்சியளிக்கும் சிலையின் முன் அமர்ந்து ஆயுதங்களுக்காக வேண்டிக் கொள்வது போன்ற காட்சி நீக்கப்பட வேண்டும் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மவோரியர்களின் கலாச்சாரத்தைப்போல காட்சியளிக்கும் சிலை வடிவம் உலக இளைஞர்கைளை ஏதோ ஒரு பாதையில் கொண்டு செல்வதைப் போல உள்ளது.

ஆட்டத்திற்கான ஆயுதங்களைப் பெறுவதற்காக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணத்திலான சிலையின் முன்புறம் அமர்ந்த நிலையில் உருவம் தெரிகிறது. அதன் அருகே ‘இன்வோக்’ என்ற குறியீடு உள்ளது. அதனை அழுத்திய பின்னர் காத்திருந்தால் ஆயுதங்கள் கிடைக்கின்றன.

ஆயுதங்களைப் பெற்ற பிறகு இந்த இணைய ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடிகிறது. ஆயுதங்களைப் பெற முடியாமல் போனால் ஆட்டத்தில் தோல்வியுற்று வெளியேற வேண்டிய நிலை உள்ளது என்பதாக ஆட்டம் செல்கிறது.

இந்த வகையான சிலையமைப்பு உலக இளைஞர்களை புதிய திசையில் கொண்டு செல்வதற்கான உத்தியாகும் என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

‘பப்ஜி’ ஆட்டம் மலேசிய இந்திய இளையோர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் 19 காலத்திற்கு முன்னர் இளையோர் பலர் உணவகங்களில் அமர்ந்தபடி இந்த ஆட்டத்தை ஆடி வந்தனர். கோவிட் 19 வந்த பின்னர் அவரவர் வீட்டில் அமர்ந்தபடி ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.

2000ம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படமான பேட்டல் ராயல் (Battle Royale) திரைப்படத்தின் விளையாட்டு வடிவமே ‘பப்ஜி’ என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here