மூழ்கிவிடாது கப்பல்

நாட்டின் இடைத்தேர்தலாக இருக்கட்டும். பொதுத்தேர்தலாக இருக்கட்டும் அதற்கான நேரம் இதுவல்ல. இப்படிச்சொன்னவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது. நல்ல வார்த்தையாகவே இருக்கிறது!

இவ்வார்த்தையை யார் சொன்னாலும் யோசிக்க வேண்டிய அவசியே இல்லை. ஆஸ்பத்திரியில் இருந்துகொண்டு அரசியல் பேசலாம். அரசியல் நடத்தமுடியாது. அரசியல் பேசுவதற்கும்  நடத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

நாட்டின் நிலைமை சுகாதாரத்தின் கைகளில் இருக்கிறது.  சுகாதாரம் மக்களை இயக்கிக்கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் இடைத்தேர்தலாக  இருக்கட்டும் பொதுத்தேர்தலாக இருக்கட்டும். எந்த தேர்தலுக்கும் செவி சாய்க்க இது சரியான நேரமில்லையென்றே மக்கள் கருதுகின்றனர்.

தேர்தல் என்றால் பிரச்சாரங்கள் இருக்க வேண்டும் . மக்களின் மனம் மாற்றங்களை பிரசாரங்களால்தான் உணர முடியும். மக்கள் மன பாதிப்பில் இருக்கும்போது யாரைத்தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைவார்கள்.

இப்போது, மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் என்பது வன்புணர்ச்சிக்குச் சமமாகும். இடைத்தேர்தல் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கும் இந்நேரத்தில் யாரைத்தேர்வு செய்தால் நன்மை கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் போகும்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம். அரசியல் நடத்தமுடியாது. மக்கள் கூடல்  இடைவெளி, தோற்று, என்றெல்லாம் இருக்கின்றன. இந்நேரத்தில் மக்களை அணுகும் முறை ஆபத்தானது. நெருக்கம் தவறானது. எதிர்மறையே அதிகமாக இருக்கிறது.

எஸ்.ஓ.பி. எனும் நடைமுறைச் சாத்தியம் தவறான நடவடிக்கையாகிவிடும். இது அரசின் முடிவாகும். மீறினால் இது குற்றமாகும். குற்றம் செய்வதல்ல அரசியல் வேலை. குற்றத்தைத் தடுப்பதுதான் அரசியலின் பணியாக இருக்க வேண்டும்.

இதற்குத்தான் ஊழல்துறை இருக்கிறது. ஊழல்துறையின் கண்கள் இவற்றையெல்லாம் கவனிக்கும். இந்தக்காலக் கட்டதில் பொதுத்தேர்தல் பேச்சே வேண்டாம் என்கின்றனர் சரியான அரசியல் வாதிகள். இது நியாயமான பேச்சாகத்தான் உணரப்படவேண்டும்.

இடைத்தேர்தல் மட்டும் சரியா என்றும் கேட்கலாம். சரியில்லை என்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருக்க வேண்டும். தேர்தல் என்பது மக்களுக்காக. நாட்டு மக்கள் பிரச்சினையில் இருக்கும்போது தேர்தலை ஒத்திவைத்திருக்கலாம். இடைத்தேர்தல் யாருக்காக என்பதுதான் புரியவில்லை!

தேர்தல் ஆணையம் அப்படி கூட்டல் இடைவெளியைச் சிந்திக்காதது ஏன்? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

இடைத்தேர்தலை ஒத்திவைப்பதில் ஏதும் மூழ்கிவிடாது. இன்னும் காலம் இருக்கிறது நிதானமாக நடத்த முடியாதா?

நாட்டில் சாதகமற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தலை நடத்த மலேசியா தயாராக இல்லை, இப்போது கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொஹமட் (பிக்ஸ்) தெரிவித்தார் .

“நாங்கள் இப்போது ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் … ஆனால் இந்த நேரத்தில் நாடு ஒரு தேர்தலுக்கு பொருந்தாது, ஏனென்றால் எங்களால் பிரச்சாரம் செய்ய முடியாது, கூட்டம் இருக்க முடியாது, தேர்தல்களின் போது நாங்கள் என்ன செய்தோம்,” என்று அவர் கூறினார். மேலும் விலை உயர்ந்ததாக இருக்கும்.

இன்று இங்குள்ள பெர்தானா தலைமைத்துவ அறக்கட்டளையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதீர், தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்தப்பட்டால், சிலர் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

பிரதமராக திரும்புவதற்கு அவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, டாக்டர் மகாதீர், “இந்த எண்ணிக்கை தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது” என்று தனக்குத் தெரியாது என்றார்.

பி.கே.ஆர் தலைவர் டத்துக் செரி அன்வர் இப்ராஹிம் உடனான தனது உறவைப் பற்றி டாக்டர் மகாதீர், அன்வருடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார், ஆனால் அவர் மேலும் கூறினார்: “ஒருவேளை அவர் என்னுடன் ஒரு பிரச்சினை இருக்கலாம், நீங்கள் (நிருபர்கள்) அவரிடம் கேட்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here