ஏழாம் அறிவு

எந்த நோய் என்பதல்ல. எந்த நோயாக இருந்தாலும் மருந்து என்ற அவசியமே முதலில் வந்து நிற்கும். மருந்தில்லாமால் மானிடம் செழிக்காது என்பதுதான் இன்றைய வழக்காக இருக்கிறது.

பல நாடுகள் நோயையும் பரப்பி, அதற்கான மருந்தையும் தயாரித்து, கோடி கோடியாய் சம்பாதிக்கின்றன என்பதைக்கேள்விப்படுமுன்  இக்கருத்தை சினிமா ஏழாம் அறிவைக்காட்டிவிட்டது.

சினிமாவில் காட்சியாக கூறப்பட்ட இச்செய்திகள் பரவலாக பாமர மக்களுக்குப் போய்ச்சேரவில்லை. இதற்குக்காரணம் பாமரமக்களுக்கு உலகமய ஏமாற்று நுணுக்கம் தெரியவில்லை என்பதுதான்.

மக்களுக்கு உலகமய ஏமாற்று தெரிந்திருந்தால்தானனே சினிமாவின் காட்டப்பட்ட போலி மருந்துகள் கதையும் தெரிந்திருக்கும். ஏழாம் அறிவு படம் எதிர்பார்த்ததுபோல் இல்லை என்பதற்கும் இதுவும் காரணம்.

ஏழாம் அறிவு சிறந்தது என்று சொல்கின்றவர்கள் போதி தர்மரை அறியாமல் சொல்ல முடியாது. போதிதர்மரைத் தெரிதிருந்தால்தான் ஏழாம் அறிவு பேசப்பட்டிருக்கும். நோய், மருந்துகளும் அப்படித்தான்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே நோயும் மருந்தும் இருப்பதை மக்கள் அறிந்திருந்தாலும் அவை சித்தர்கள் கைவசம் மட்டுமே இருந்தன. தமிழன் எதையும் சொல்லிக்கொடுக்க வில்லை என்ற அவப்பெயர் இருந்தது., இன்னும் இருக்கிறது.  ஏன் சொல்லிக்கொடுக்கவில்லை என்று  மட்டும் யாரும் யோசிக்கவில்லை. அப்போதே சொல்லிக்கொடுத்திருந்தால் இன்று பலபேருக்கு சித்தம் கலங்கியிருக்கும். போலிகள் உருவாகி  நாட்டையும் மக்களையும் அழிவுக்குக் கொண்டு போயிருக்கும். சித்தர் மருந்துவம் தீயவர்களின் பெரிதாகச் சிக்கவில்லை.

புது மருத்துவத்தை வைத்துக்கொண்டு உலகம் பந்தாடப்படுகிறது. கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது. அது மறைக்கப்பட்டிருக்கிறது. நோயின் தாக்கம் விபரீத கட்டத்தை அடையும் வரை காத்திருக்கிறார்கள். மருந்துகள் கண்டுபிடிப்பதுபோல் நாடகமாடுகிறார்கள்.

திடீரென்று மருந்து வெளியாகும்போது அதை இறுக்குப்பிடித்துப் பதுக்கி விலையேற்றுவார்கள். பற்றாக்குறை ஏற்படும். விலை எகிரும். பணம் படைத்தவர்கள் பிழைப்பார்கள். பாமர மக்கள் மடிவார்கள். இப்படித்தான் நடக்கப்போகிறது.

ஏழைநாடுகள் ஏமாறப்போகின்றன. இதுதான் நடக்கப்போகிறது. இதுதான் உண்மை. ஆனால் மருந்து யாரிடம் இருக்கிறது? யார் அளுமை

தொலைத்த இடத்தில்தானே தொலைத்த பொருளை தேடவேண்டும். தொற்று எங்கு தோன்றியதோ அங்குதானே மருந்தும் இருக்க வேண்டும். தொலைத்த இடம் எது?

மக்கள் சன்னமாக விழிப்படைந்திருக்கிறார்கள். தொலைத்த இடம் தெரியும். தொற்று தோன்றிய இடமும் தெரியும். திட்டமிட்ட பரப்புதல் ஓரளவு வெற்றி பெற்றிருக்கலாம் . மற்ற நாடுகள் அமைதியாக மருந்து கண்டுபிடிப்புகளில் இறங்கியிருக்கின்றன. ஏதாவது ஒரு நாடு ஏழாம் அறிவைப் பெற்றுவிடும். ஏழாம் அறிவு எங்கிருக்கிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here