மலேசியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நடமாட்டக் கட்டுபாட்டுத் தளர்வை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் அறிவித்தார்.
மார்ச் 18 தொடங்கி மூன்று மாதத்திற்கு அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு, நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் காடுப்பாட்டு ஆணை ஜூன் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கோவிட் 19 நோய் தொற்றை மலேசியா மிக சிறப்பான முறையில் கையாண்டு மக்களுக்கு பாதுகாப்பினை உறுதிப் படுத்தி வருகிறது. எனவே இம்மாதம் ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 31 வரை மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுகிறது.
மீட்சியுறும் ஆணை மக்களின் வழக்கமான வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும். வர்த்தகம், மாநிலம் கடந்து செல்வது, தொடுதல் முறையில்லாத விளையாட்டுகள், முடி திருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்று சில நிமிடங்களுக்கு முன்பு உரை ஆற்றிய டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.
7 முக்கிய கூறுகளை முன்நிறுத்தி அரசாங்கம் இந்த முடிவெடுகளை எடுத்துள்ளது.
1- பொது சுகாதாரம்
2- சட்டவிதிகள்
3- எல்லை பாதுகாப்பு
4- வர்த்தக துறைகள் செயல்பட அனுமதி
5- இயல்வு வாழ்க்கை நிலை
6- சமூக கடப்பாட்டை உறுதி செய்தல்
7- சிக்கலை எதிர்நோக்கும்க் தரப்பினருக்கு பாதுகாப்பு
மாநிலம் கடந்து மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நடமாட்டக் கட்டுபாடு அமலில் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மலேசிய சுகாதார அமைச்சு முடிவெடுத்த பின்னர் கல்வி அமைச்சு முன் ஏற்பாடுகளை செய்ததும் அறிவிப்புகள் வழங்கப்படும். அதோடு பள்ளிகள் கட்டங்கட்டமாக தான் திறக்கப்படும்.
தொடுதல் முறை இல்லாத விளையாட்டுகள், படப்பிடிப்புகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு சுற்றுலா துறைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு நாட்டின் எல்லைப் பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன.
இரவு கேளிக்கை மையம், திறந்த இல்ல உபசரிப்பு, வீட்டு வைபங்கள் போன்ற அதிகமானோர் கலந்துக் கொள்ளக் கூடிய விழாக்களுக்கு இன்னும் அனுமதி இல்லை.
எஸ்ஒபி விதிகளுக்கு ஏற்ப ஹரி ராயா ஹஜி பெருநாள் கொண்டாடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டு சுற்றுலா தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்தக துறைகள் செயல்பாடுகள் இயல்பு முறைக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
கோவிட் 19 நோய் தொற்றை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு மக்கள் கையில் தான் உள்ளது. அரசாங்கம் விதித்திருக்கும் எஸ்ஒபிகளை முறையாக பின்பற்றி முகக் கவசம், செனிடைஸர், சமூக இடைவெளி போன்றவற்றை முறையாக பின்பற்றினால் இத்தொற்றை எதிர்த்து நாம் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார்.