மிருகத்தனமான செயல்.., தனியார் மருத்துவமனையில் காசு கொடுக்காததால் வயதானவரை கட்டிவைத்த சம்பவம் !

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதியவர் மருத்துவக் கட்டணமாக ரூ,11 ஆயிரம் தரவேண்டியிருந்து. சிகிச்சை முன்னதாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். பிறகு தங்களால் முழு கட்டணத்தையும் கொடுக்க இயலவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகள் கூறியுள்ளார்.

காசு கொடுக்காததால் தான் இப்படி மருத்துவமனை நிர்வாகம் கை, கால்களை கட்டி வெளியேறிவிடாதவாறு வைத்துள்ளது என தெரிவித்தார்.இந்த செய்தி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜசிங் சவுகான்னுக்கு இந்த சம்பவம் சென்றது. உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கை, கால்கள் கட்டப்பட்டுள்ள நபரின் உடலில் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு உள்ள காரணத்தினால்தான் அவரை கட்டி வைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இல்லையெனில் அவர் இதர பொருட்களை உடைக்கக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாகத்தான் இந்த முடிவினை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளது. அதே போல மனிதாபிமான அடிப்படையில் அவருடைய மருத்துவக் கட்டணத்தை தள்ளுபடி செய்ததாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையின் மீது மனித உரிமை மீறல் போன்றவற்றை கருத்தில் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டப்பட்ட நிலையில் இருக்கும் வயதானவரின் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here