ஆசியாவின் சிறந்த 50 இன்னிசை இரவு விடுதிகளில் மூன்று மலேசியா விடுதிகளுக்கு அங்கீகாரம்

குடிபோதையில் காரோட்டுபவர்கள் ஏற்படுத்தும் சாலை விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மலேசியாவில் மதுபான விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேளையில் ஆசியாவின் சிறந்த 50 இரவு விடுதிகள் தேர்வில் மலேசியாவின் 3 விடுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோவிட் 19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தகங்கள் அனைத்தும் கிட்டத் தட்ட திறக்கப்பட்டு விட்டன. ஆனால் இன்னிசை இரவு விடுதிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நேரத்தில் மலேசிய விடுதிகளுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மதுபான கடைகள், இன்னிசை இரவு விடுதிகளின் செயல்பாடு தனி வியாபாரமாக பார்க்க முடியாது. அவை சுற்றுலாத்துறை, அந்நிய செலாவணி ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

எல்லாத் தொழிற்துறைகள் செயல்பாட்டிற்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அயிரக்கணக்கில் முதலீடு செய்து விட்டு வருமானம் இல்லாமல் வாடும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மதுபான விடுதிகள் முடப்பட்டிருக்கும் போதே குடிபோதையில் ஏற்படும் விபத்துகளும் மரணங்களும் அதிகரித்து வருகிறன. முழுமையாக திறக்கப்பட்டால் நிலமை எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

சுற்றுலாத்துறை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பும் போது, அங்கீகாரம் பெற்ற மூன்று விடுதிகள் அந்நிய சுற்றுப்பயணிகளின் தேர்வாக அமையும் என்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here