ஒரே வானம், ஒரே பூமி

அரசியல் இல்லாமல் மக்கள் இல்லை, மக்கள் இல்லாமல் அரசியலும் இல்லை. எந்த அரசு என்பதில் கவனம் செலுத்துவதில் நேரத்தைச் செலவழிப்பதைவிட மக்கள் மீதான பார்வை என்ன என்பதுதான் கேள்வியாக இருக்கவேண்டும்.

இதில், மலேசியம் மகத்தானதாக இருந்துவருகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அதை அரசும் உணர்ந்திருக்கிறது.  மக்களே காரணம்.

மக்கள் ஒன்றுபடாமல் அரசியல் நிலப்பாட்டைக் கூறுவது அத்துணைச் சுலபமல்ல. அன்றுதொட்டு இன்றுவரை மக்கள் பொறுப்புணர்வுடன் ஒத்துழைப்பது நாட்டுக்குக் பெருமை சேர்த்துவருகிறது. இதைத்தான் மானன்னர் வலியுறுத்துகிறார். மன்னருக்குப் பெருமை தருவது இரண்டே இரண்டுதான்.

மக்களால் நாட்டுக்குப் பெருமை சேரவேண்டும். நாட்டின் வளப்பத்தில் அனைத்து மக்களும் நன்மை அடைய வேண்டும்.

இவை இரண்டும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டல் மன்னருக்குப் பெருமை. இன்றைய மாமனன்னரின் கருத்திப்பவுகள் தெலிவாகக் காட்டுகின்றன. மனம் , குணம் என்பதில் ஒருநிலைப்பாட்டுடன் செயல்பட்டால்  நாட்டை நன்மை நோக்கி நகர்த்திச்செல்லும் மந்த்திரச்சொல்லாக  ஒற்றுமை அமைந்துவிடும்.

மக்கள் ஒற்றுமையில் எந்தக் குறைகளும் இல்லை. குறைகள் இல்லாமல் எவரும் ஆட்சி செய்யமுடியாது. ஆனால், குறைகள் மிகுதியாக இல்லாமைதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு மூலமாக இருக்கிறது. அதில் மக்கள் நாட்டு உணர்வோடு இருப்பதை எல்லா சூழ்நிலையிலும் காணமுடிகிறது.

மன்னரே நாட்டின் வின்னர். அவரின் புத்துணர்ச்சி செய்திகளால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நாட்டின் எதிர்காலம் மகிழ்சியோடு நின்றுவிடுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒரு தொடர்கதைபோல் முடிவில்லாமல் இருக்க வேண்டும்.

இதைத்தான் தம் பிறந்தாநாளில் மான்னர் வலியுறுத்தி இருக்கிறார். நாம் மலேசியர்கள் என்பதில் மாற்றமே இல்லை. மலேசியக்கொடியும் அதைத்தான் உணர்த்துகிறது. அக்கொடியில் நீலம், மஞ்சள், வெள்ளை நிறங்கள்  இருக்கின்றன.. இவையாவும் மக்களுக்கான நிறங்கள், மஞ்சள் நிறம் மன்னருக்கானது. சிவப்பு நிறம் அவைவருக்கும் ரத்தம் என்று  காட்டுகிறது இப்படியும் கூறலாம் அல்லவா?

ஒரே வானம், ஒரே பூமி எங்கும் பனி மழை பொழிகிறது. அதன் பணி தொடர்கிறது. வாழ்க மன்னர் என்று வாழ்த்தும் நேரம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here