(UPDATED)
மீட்டியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாற்றும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாது.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள மீட்டியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் மாற்றம் செய்யும் அதிகாரம் ரப்பிட் கே.எல். நிறுவனத்திற்கு கிடையாது என்று தற்காப்பு மூத்த அமைச்சர்
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் அவர்களாக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். கோவிட் 19 தொற்று பரவுவதை தடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை அரசு பொறுத்துக் கொள்ளாது என எச்சரித்தார்.
இதனிடையே, அரசாங்கத்தின் ஆணைக்கு ஏற்ப ரப்பிட் கே.எல். நிறுவனம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் என அறிவித்துள்ளது.
இன்று காலை ரப்பிட் கே. எல் நிறுவனம் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், …
அரசாங்கம் அறிவித்துள்ள மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப ராப்பிட் கே.எல் ரயில்களில் இனி சமூக இடைவெளி கட்டுப்பாடு இருக்காது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அப்துல் அடி அம்ரன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 10ஆம் தேதி முதல் நூறு விழுக்காடு பணிகள் பிரயாணம் செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி அளித்திருக்கிறது.
கிளானா ஜெயா, அம்பாங், ஸ்ரீபெட்டாலிங், சுங்கை பூலோ, காஜாங் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வரும் ரபிட் கே.ல் ரயில்கள், இனி சமூக இடைவெளி கட்டுப்பாடு இல்லாமல் தனது சேவையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு அமலாக்கத்திற்கு முன்னர் நாளொன்றுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பிரயாணம் செய்வார்கள். கட்டுப்பாட்டு காலத்தில் இரண்டு லட்சம் பயணிகள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர் நாளை முதல் மீண்டும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்திற்கு திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்