கேரளாவில் தேங்காயில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அலை அடங்கும் முன்பு, மலப்புரத்தில் மேலும் ஒரு யானை வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே பன்றிகளை வேட்டையாட வைத்த தேங்காய் வெடியை சாப்பிட முயன்ற கர்ப்பிணி யானை வாய் சிதறி, பல நாள் தவித்து பலியானது. இதில் வெடி செய்து கொடுத்த மலப்புரம் எடவண்ணா பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
வெடியை வைத்த தோட்ட உரிமையாளர்கள் அப்துல் கரீம் மற்றும் அவரது மகன் ரியாசுதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது