பெரிக்காதான் நேஷனல் வசம் இருக்கும் மத்திய அரங்சாங்கத்தை மீண்டும் கைப்பற்றுவது குறித்த முடிவை பாக்காதான் ஹாராப்பான் உச்சமன்றம் அடுத்த வாரம் அறிவிக்கும்.
நேற்று மாலை பி.கே.ஆர் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு பின்னர் பி.கே. ஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
ஜ.செ.க பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சித் தலைவர் மாட் சாபு,
செர்சத்து கட்சித் தலைவர் என தன்னை தொடர்ந்து பிரகடனம் செய்து வரும் துன் மகாதீர், சபா வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷபி அப்டால் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றையக் கூட்டத்தில் எவ்விதமான கருத்து மோதல்கள், விவாதங்கள் ஏதும் இல்லாமல் இணக்கமான சூழ்நிலையில் கூட்டம் நடைபெற்றது என்று அவர் அறிவித்தனர்.
பல்வேறு அதிரடி.மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்புமுனையாக வரலாற்றில் முதல் முறையாக துன் டாக்டர் மகாதீர் முகமட் பிகேஆர் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான் இருக்கிறது. கட்சித் தாவல் தற்போது மிகச் சாதாரணமாக நடந்து வருகிறது.
எனவே இன்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற பாக்காதான் ஹாராப்பான் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையேற்றிருப்பதும், அவருக்கு அருகில் துன் மகாதீர் அமர்ந்திருப்பதும் அரசியல் களத்தை அனல் பறக்க செய்துள்ளது.
இக்கூட்டத்தில் பி.கே.ஆர், ஜசெக, அமானா, பெர்சத்து, சபா வாரிசான் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.