கோவிட் 19 தொற்றில் சீனா தடுமாறி எழுத் தொடங்கியதுமே மலேசியா டுரியானுக்கான சந்தை சீனாவில் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
மலேசியா டுரியான் ஏற்றுமதி கோவிட் 19 தொற்று காரணமாக தடைப்பட்டாலும், சீனாவில் கோவிட் 19/தொற்று முழுமையாக துடைதொழிக்கப்பட்ட பின்னர், மலேசிய
டுரியானுக்கான தேடல் வழக்கம் போல அதிகரித்துள்ளது என்று மலேசியாவிற்கான சீனத் தூதரகத்தின் வர்த்தப்பிரிவு அதிகாரி ஷி ஷிமிங் குறிப்பிட்டார்.
சீனா மக்களின் முதல் தேர்வாக மலேசிய டுரியான் விளங்குகிறது. மலேசிய டுரியான் சீனாவில் நண்பர்களுக்கு மத்தியில் பரிமாறிக் கொள்ளும் பரிசு பொட்டலமாகவும் விளங்குகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சீனா 4 கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 3 ஆயிரத்து 200 டன் டுரியான் இறக்குமதி செய்தது.
அந்த எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்து கடந்த 2019 ஆம் ஆண்டு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆறு இலட்சம் டன் டுரியானை சீனா இறக்குமதி செய்தது.