தடுக்கமுடியாத தடுப்புகள்

சாலைத்தடுப்புகள் இன்று இரவிலிருந்து நீக்க்கப்படும் என்றாலும்  அந்த நீக்கம் கட்டௌப்பாடற்ர் நீக்கம் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.

கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மன இறுக்கத்தை சாலை தடுப்புகள் நீக்கம் உறுதிப்படுத்தும். முபெல்லாம் பெருநாள் காலம் என்றால் ஒரு பாடல் சட்டென்று ஒலிபரப்பாகும்.

பாலிக் கம்போங் என்ற பாடலை தமிழ் மக்களும் பாடுவதுண்டு. மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் இது.

இந்தப்பாடலை கடந்த மூன்று மாதங்களாக வானொலியில் கூட ஒளிபரப்பப்படவில்லை. அப்பாடலின் வரிகள் பொருள் மூன்று மாதங்களா முரண்பாடாக இருப்பதால் இப்பாடல் ஒலியேற்றப்படவில்லை.

இன்றை தொடக்கம் பெருநாள் உற்சாகம் இல்லம் திரும்புவதில் ஏற்பட்டிருக்கிறது. பலர் சொந்த ஊருக்கு உற்சாகமாகக் கிளம்பிவிட்டார்கள்.

அனைத்து மக்களும் உற்சாக உணர்வோடுதான் கிளம்பியிருக்கிறார்கள். இது ஹரிராயா உணர்வு. பெருநாள் ஏக்கம். உறவுகளின் சங்கமம்.

இந்த மூன்று மாதங்களில் மனமாற்றங்கள் மிகவும் மாறுபட்டதாய் மாறியிருந்தன. அதில் போதை, மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட மரணங்களும் அதிகம். சாலை தடுப்புகளில் இவையாவும் நிகழ்ந்தன.

சாலைத் தடுப்புகள் இப்போது இல்லை. ஆனாலும் இருக்கிறது. மது அருந்தியபின் சாலையில் வாகன ஒட்டுகின்றவர்களைத் தடுக்கும் சாலை தடுப்புகள் நிச்சயம் இருக்கும். சாலை ரவுடித்தனம் இருக்கும், கடத்தல் இருக்கும். இவற்ரைத்தடுக்கும் வகையில் சாலைத்தடுப்புச் சோதனகள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து தப்பவே முடியாது. மடியில் கனமில்லயென்றால்  வழியில் பயமில்லை.

எல்லையத் தாண்டிப் போனாலும் கூடல் இடைவெளி கூடவே வரவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here