இன்றைய ஆன்மிக குறிப்புகள்

ஆன்மிகம் என்பது கடல் போன்றது. அதில் நமக்கு தெரிந்த செய்திகள் சில துளிகள் தான். இந்த பதிவில் அவசியம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில ஆன்மிக குறிப்புகளைப் பார்ப்போம்.

1.இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. அமாவாசை அன்று முடிந்தவரை நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நமது வீட்டிற்கு அடுத்தவரை அழைத்து உணவு அளிப்பது பெரும் புண்ணியம்.

3.கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது .

4.காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் தான் ஜபிக்க வேண்டும். பிரயாணத்தின் போது, சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. இறைவனுக்கு சூடம் காண்பிக்கும்போது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்கவேண்டும்.

6 வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும் .அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பூசிகொள்ள கூடாது

9. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here