செராஸில் இருந்து காஜாங்கிற்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இந்திய இளைஞர் ஒருவர் சாலையின் தடுப்பு கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று மதியம் 1.10 மணியளவில் பத்திரிகை விநியோகம் செய்யும் அந்த இளைஞர் வேலைகளை முடித்து விட்டு தாமான் ஜெனாரிஸில் உள்ள தமது வீட்டிற்கு செல்லும் போது வேகக் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு கம்பியை மோதியுள்ளார். வேகமாக வந்ததால் கம்பியை இடித்ததும் சாலை மறுபுறத்தில் பறந்து சென்று விழுந்துள்ளார். இதனால் அவரின் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.