மாற்று திறனாளி பாதுகாவலர் திடிர் மரணம்

உலு கிள்ளான் சமய பள்ளி ஒன்றில் வேலை செய்து வரும் மாற்றுத் திறனாளியான பாதுகாவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

40 வயது நிரம்பிய அவர் தம்முடைய பாதுகாவலர் அறையில் கீழே விழுந்து நிலையில் கிடந்தார்.

அவ்விடத்தில் ஆயுதங்கள் எதும் இல்லை என தடயவியல் பிரிவு கூறியது. அங்குள்ள கட்டடத்தைச் சுற்றியுள்ள ரகசிய கேமராக்களை பார்ததில் இது ஒரு திடிர் மரணமாக உள்ளது என கோலாலம்பூர் குற்றப்பிரிவு இலாகாவின் தலைவர் கமிஷ்னர் நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.

மேலும் இச்சம்பவம் திடிர் மரணம் என்ற பிரிவின் கீழ் விசாரிக்கப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மரணத்திற்கான உண்மை காரணம் அறியப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here