வீடுகளை உடைத்து திருடிய ஆடவர் கைது

கடந்த 8ஆம் தேதி இரவு 10 மணியளவில் தாமான் சீ டவுன் ஹவுஸ் வட்டாரத்தில் தம்முடை எக்ஸ் 70 புரோட்டோன் ரக காரை காணவில்லை என ஆடவர் ஒருவர் போலீஸில் புகார் செய்திருந்தார்.

மறுநாள் 9ஆம் தேதி புக்கிட் பிரிமா பிளாங்கி எனும் அடுக்ககத்தின் கார் நிறுத்தும் இடத்தில் உள்ளூர்வாசி ஒருவரை போலீஸார் விசாரித்தனர். வீடுகளை உடைத்து திருடுவது, கிள்ளான் பல்லத்தாக்கு பகுதிகளில் கார்களை திருடும் செயல்களில் ஈடுப்பட்ட அவ்வாடவர் விசாரிக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்.

பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சி 200 ரக மெர்ஸடிஸ் பென்ஸ் கார் அவரிமிடருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு தாமான் சீவில் காணாமல் போன எக்ஸ் 70 ரக காரும் ஜாலான் பிரிமா பெலாங்கி 1 எனும் இடத்தில் சாலை ஓரத்தில் இருந்தது.

அதோடு கைது செய்யப்பட்ட ஆடவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் விலை உயர்ந்த பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல் விசாரணைக்காக அவ்வாடவர் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வழிப்பறி, வீடு உடைத்து திருவது என அவர் மீது 24 குற்றச் செயல்கள் ஏற்கெனவே பதிவாகியுள்ளது. ஸ்பைகி கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர் என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here