ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு

ஆப்பிள் நிறுவனம் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்சமயம் இந்த நிகழ்வுக்கான அட்டவணையை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.

அட்டவணை விவரங்களின் படி டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கி, பிளாட்ஃபார்ம்ஸ் ஸ்டேட் ஆஃப் யூனியன் டைமிங் மற்றும் இதைத் தொடர்ந்து ஐஒஎஸ், ஐபேட் ஒஎஸ், மேக்ஒஎஸ், டிவிஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் உள்ளிட்டவற்றின் எதிர்கால பதிப்புகள் பற்றிய விவரங்களுடன் டெவலப்பர்கள் ஆப்பிள் மென்பொருள் பொறியாளர்களுடன் கலந்துரையாட முடியும்.

கீநோட் உரை ஜூன் 22 ஆம் தேதி காலை 10 மணி துவங்குகிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க்கில் இருந்து ஆப்பிள் வலைதளம், ஆப்பிள் டெவலப்பர் ஆப், ஆப்பிள் டெவலப்பர் வலைதளம், ஆப்பிள் டிவி ஆப் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்றில் நேரலை செய்யப்படுகிறது.

இதுதவிர சீனாவில் டென்சென்ட், IQIYI, பிலிபிலி மற்றும் யோகியூ உள்ளிட்ட தளங்களில் நேரலை செய்யப்படுகிறது. ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 இல் துவங்கி ஜூன் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு பற்றிய இதர விவரங்கள் ஜூன் 22 ஆம் தேதிக்குள் ஆப்பிள் டெவலப்பர் செயலியில் தெரிவிக்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here