தேவையுள்ளபோது மட்டும் பயன் படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றி விடும் கொள்கை எத்தகையது?
இதைக்கரிவேப்பிலைக்கு ஒப்பிடலாம் என்பது சரியாக இருக்கும். கரிவேப்பிலைக்கு நிச்சயம் ஒப்பிடலாம்.
கோவிட் தொற்று தொடங்கியபோது முன்னணி பணியாளர்கள் அதிகமாகத் தேவைப்பட்டார்கள். அப்போது உடனடியாகக் கைகொடுத்தவர்கள் மருத்தவத்தாதியர்கள். வேலைகுக் காத்திருந்த மருத்துவர்கள். கொரோனா ஆபத்தான தொற்று என்று அறிந்தும் வேலையில் இணைய ஆர்வம் காட்டினர். அந்த துணிச்சல் மிகச்சிறப்பானது. மருத்துவத்துறையில் முன்பே இருந்தவர்கள் வேலையை இழக்க முடியாது. அது அவர்களின் கடமை. பயந்து ஒதுங்கினால் அது மருத்துவத்திற்கு அழகல்ல.
ஆனால், புதிதாக இணைந்தவர்களுக்குச் சலாம் போடத்தான் வேண்டும். சவால்மிக்க வேளையில், மிகத்துணிச்சலாக இணைந்தவர்களைப் பாராட்டுவதும் அவர்களை மறுப்பின்றி அனுப்பிவைத்த அவர்களின் பெற்றோர்களும் எத்துணைப் பாராட்டினாலும் தகும்.
இதை எதிர்நீச்சலுக்கு ஒப்பிடலாம். உயிர்ப்பணயம் என்றாலும் தகும். இவர்களின் தாதிமைத்தொழில் நிரந்தரமாக அமையும் என்பதற்காக இணையவில்லை. நிரந்தரமானால் அவர்களுக்குச் செய்யும் ஒத்தாசையாகும்.
ஒப்பந்த காலம் முடிந்ததும் அவர்களை ஒதுக்கிவிடுவதை விட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது அரசாங்கத்தின் கடமையாக இருக்கும். அதுதான் நன்றிக்கடன்.
நாட்டின் மருத்துவச்சேவைகள் விரிவடையவேண்டியிருக்கிறது. அதன் தூரத்தை விரைவாகக் கடந்தாக வேண்டும். அதற்கு மருத்துவம் சார்ந்த ஆள்பலம் தேவை தேவைப்படும்போது மட்டும் அழைக்கப்படுகின்றவர்ளாக ஒப்பந்த மருத்துவர்கள் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போதுமே தயார் நிலையில் இருக்க, சவால்களை எதிர்கொள்ள பயிற்சிப் பெற்றவர்களாக இருக்க வேண்டுமானால், பணியில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.