பெய்ஜிங் மார்க்கெட்டை மீண்டும் தாக்கிய கொரோனா

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மார்க்கெட் பகுதி ஒன்றை கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கி உள்ளது.

இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளித்து வருகிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதிதான் முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வுஹன் நகரத்தை சேர்ந்த நபருக்கு ஏற்பட்டது. அவரை தொடர்ந்து வுஹனில் பலருக்கு கொரோனா ஏற்பட்டது.

முக்கியமாக வுஹனில் மார்கெட்டிற்கு சென்று வந்த பலருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் வுஹனில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியது. அதன்பின் உலகம் முழுக்க வைரஸ் தீவிரம் எடுத்து பரவியது. சீனாவில் மொத்தம் 83,075 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 4634 பேர் அங்கு இதனால் பலியானார்கள்.

ஆனால் என்ன

ஆனால் சீனாவில் பெரிய அளவில் மற்ற நகரங்களை, மாகாணங்களை கொரோனா வைரஸ் தாக்கவில்லை. ஹூபே மட்டுமே அங்கு அதிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால் பெய்ஜிங் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. வுஹன் மொத்தமாக மூடப்பட்ட காரணத்தால் அங்கிருந்து பெய்ஜிங்கிற்கு கொரோனா வைரஸ் பரவல் பெரிதாக ஏற்படவில்லை.

மீண்டும்

இந்த நிலையில் சீனாவில் தற்போது புதிய கொரோனா கேஸ்கள் பரவ தொடங்கி உள்ளது. இந்த முறை அங்கு பெய்ஜிங்கில் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி இருக்கிறது. இதற்காக பெய்ஜிங்கில் மட்டும் போர்கால எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் மார்க்கெட் ஒன்றில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது .

தீவிரம்

அதன்படி அங்கு இருக்கும் ஹின்பாடி மார்க்கெட் பகுதியில் 45 பேருக்கு இரண்டு நாட்களில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு சோதனை செய்யப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலே 35 பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவி இருக்கிறது. இதனால் தற்போது பெய்ஜிங் உள்ளே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

எப்படி நடந்தது

சரியாக அந்த மார்க்கெட் சென்று வந்த நபர்களுக்கு மட்டுமே அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மார்க்கெட் மூலம் சீனாவில் கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த இடம் சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை செய்யும் மார்க்கெட் ஆகும், இங்கிருந்து எப்படி கொரோனா பரவியது என்று சந்தேகம் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளது .

கட்டுப்பாடு வருகிறது

இதனால் பெய்ஜிங் உள்ளே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. போர்கால எமர்ஜென்சி அறிவுப்புகள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங் என்பது சீனாவின் தலைநகரம் ஆகும் . இங்கிருந்து கொரோனா வைரஸ் பரவுவது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் ஆகும். இது சீனாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here