அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் நடுவே மேலும் ஒரு கருப்பர் கொலை

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவே மேலும் ஒரு கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்தது. அங்குள்ள கறுப்பின மக்கள், வெள்ளை இன அதிகாரிகளால் தொடர்ந்து கொல்லப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போராட்டம் சுமார் 2 வாரங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உணவகம் முன்பு கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளார். கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து அட்லாண்டாவில் போராட்டம் வெடித்துள்ளது. காவல் நிலையம், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற உணவகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

உணவகம் முன்பாக தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவரிடம் இருந்த எலெக்ட்ரிக்கல் துப்பாக்கியை பறித்து கொண்ட அந்த இளைஞர் ஓடி உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் போலீசை நோக்கி சுட்டதால் போலீசார் நிஜ துப்பாக்கியால் இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டனர். கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று அட்லாண்டா நகரின் காவல்துறை தலைவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here