கட்சிக்கு விசுவாசமாக இருப்போம்

கெஅடிலான் கட்சித் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை ஆதரித்திருந்தாலும் நாங்கள் ஒருபோதும் கட்சியில் இருந்து வெளியேற மாட்டோம் என்று கெஅடிலான் மகளிர் பிரிவு உதவித் தலைவி சங்கீதா ஜெயகுமார் அறிவித்தார்.

புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவாரியாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். நானும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். வெளியேற மாட்டேன் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கெஅடிலான் கட்சித் தேர்தலில் நாங்கள் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு முழு ஆதரவை வழங்கியிருந்தாலும் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருப்போம்.

செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி வெளியேறியதைப் போல் நாங்களும் வெளியேற மாட்டோம். கட்சியின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணைநிற்போம்.

சிலாங்கூர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு பக்கப்பலமாக இருக்கிறது. மறுமலர்ச்சிப் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். அடுத்தக் கட்டப் பாதைக்கு கட்சியைக் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறோம்.

தலைவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், ஒருபோதும் கட்சிக்குத் துரோகம் செய்யக்கூடாது. கெஅடிலான் கட்சியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் திறமையான தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் மிகச்சிறந்த தலைவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மகளிர் கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பக்கம் இருக்கிறார்கள். ஆகையால், டரோயா விலகியது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று இருவரும் தெரிவித்தனர்.

இதனிடையே, சிலாங்கூரில் உள்ள 18 கெஅடிலான் தொகுதி மகளிர் பிரிவுத் தலைவிகள் தங்கள் முழு ஆதரவை கட்சிக்குத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here