லீக்கான பிரபல நடிகையின் காதல் ரகசியம்

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் படத்தில் நடித்து வரும் பிரபல நடிகையின் காதலர் பற்றிய ரகசியம் கசிந்து வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா அடுத்ததாக புரி ஜெகநாத் இயக்கத்தில் கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அனன்யா பாண்டேவின் காதலர் குறித்த ஹாட்டான தகவல் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

அனன்யா பாண்டே
பாலிவுட்டில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுன்கி பாண்டேவின் மகள் தான் அனன்யா பாண்டே. பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஸ்டூட்ன்ட் ஆஃப் தி இயர், பதி பத்னி அவுர் ஹோ மற்றும் இந்த ஆண்டு வெளியான ஆங்கிரேஸி மீடியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டோலிவுட்டில்
கரண் ஜோஹர் தயாரிப்பில் டோலிவுட் பிளஸ் பாலிவுட் காம்பினேஷனாக உருவாக உள்ள டைகர் படத்தில் விஜய் தேவகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே ஒப்பந்தமாகி உள்ளார். லாக்டவுனுக்கு முன்னதாக இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.

இன்ஸ்டா அழகி
12.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமில் டாப் மாடலாக வலம் வருகிறார் இந்த இளம் பாலிவுட் நாயகி அனன்யா பாண்டே. தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு, இளைஞர்கள் இதயங்களை சுக்கு நூறாக உடைத்து வருகிறார். ஒவ்வொரு போட்டோவிற்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.

வால் சேட்டை
ஒட்டுமொத்த வால் சேட்டைக்கு சொந்தக்காரியான அனன்யா பாண்டே, தனது குறும்புத் தனமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சமீபத்தில், பிங்க் டாப்ஸ் அணிந்து கொண்டு தொப்புளை காட்டியபடி தூங்கி எழுந்து பிரஷ் செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டு வைரலாக்கினார்.

வேற லெவல் வைரல்
சமீபத்தில் தனது தோழி ஷனாயா கபூருடன் அனன்யா பாண்டே படு கிளாமர் உடையில் இணையத்தையே சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த பாலிவுட் ரசிகர்ள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு லைக்குகளை வாரி குவித்தனர். ஆனால், அந்த போட்டோவுக்கு பின் தான் அனன்யாவின் காதலர் குறித்த ரகசியம் கசிந்தது.

காதலர் யார்?
அனன்யா பாண்டே மற்றும் அவரது தோழி ஷனாயா கபூரின் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலான நிலையில், அனன்யா பாண்டேவின் காதலர் குறித்த ரகசியத்தையும் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் மூலம் அவரது தோழி அம்பலமாக்கி உள்ளார். பாலிவுட் நடிகரா என நினைத்துப் பார்த்தால் அதையும் தாண்டி ஹாலிவுட் நட்சத்திரமான டிமோதி சாலாமெட் தான் காதலர் என்ற தகவல் கசிந்துள்ளது.

இன்டர்ஸ்டெல்லார் நடிகர்
கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லார், இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய லிட்டில் உமன், 2017ல் வெளியான லேடி பேர்ட், கடந்த ஆண்டு வெளியான தி கிங் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் 24 வயது இளைஞர் டிமோதி சாலாமெட்டை தான் அனன்யா காதலிக்கிறார் என்கிற ரகசியம் தற்போது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சீக்கிரமே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here