இணைய சூதாட்டம் – 15 சீன பிரஜைகள் கைது

இணைய சூதாட்டத்தின் மூலம் லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்து வந்த கும்பலை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் படையினர் கைது செய்தனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் சுற்றுலா விசா மூலம் நாட்டிற்குள் வந்த அவர்கள் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி இணையத்தின் மூலம் சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர். அக்கும்பலைச் சேர்ந்த ஆண் பெண் என 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி நிக் எஸானி முகமட் பைசல் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து கணினிகளை கொண்டு அவர்கள் இந்த சூதாட்டை நடத்தி வந்துள்ளனர். இதன் வழி நாள் ஒன்றுக்கு 2 லட்சம் வெள்ளி வரை இவர்கள் சம்பாதித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

அவ்வீட்டில் இருந்து தொலைப்பேசி மூலம் வாடிக்கையாளர்களிடம் பேசும் இவர்களுக்கு 5 ஆயிரம் வெள்ளி வரை மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வீட்டில் இருந்து கணினிகள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அனைவரும் பெட்டாலிங் ஜெயா காவல் நிலைய தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மேலும் சட்டவிரோத சூதாட்ட பிரிவில் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஏசிபி நிக் எஸானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here