நியாயத்தின் எல்லை

முடிதிருத்தும் நிலையங்கள் திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் நியாயம் கருதியே முடக்கப்பட்டிருந்தன. முடிதிருத்துவதில் மிக நெருக்கமான தொடர்பு தொற்றை அதிகரிக்கும் என்பதன் விளைவுதான்  முடிதிருத்தும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பொதுமக்களும் அதை உணர்ந்துகொண்டார்கள்.

ஆனாலும், பொருளாதார நெருக்கடியால்  சாதகமான சூழ்நிலையில் முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க முடிந்தது. இதற்கான பணிநெறியுடன்(SOP) முடிதிருத்தம் நடைபெற்றன. அனுமதி வழங்கப்பட்டு சில தினங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் புகார்களின் எண்ணிக்கை பூகம்பமாகி விட்டது.

சிரமமான காலக்கட்டத்தில் விலையை நியாயமாக விதித்தால் கூடுதல் பயனீட்டார்கள் வாடிக்கையாளர்களாக வருவார்கள். ஆனால், அப்படி நடப்பதாகத் தெரியவேயில்லையே!

கடைகளில் உடைகளுக்கு அளவுக்கு ஏற்பவே கட்டணம் விதிக்கிறார்கள், முடிதிருத்தும் நிலையங்களில் தலைகள் மட்டுமே எண்ணிக்கையாக இருக்கிறது. குழந்தைகளின் தலைக்கும் பெரியவர்கள் போலவே விலை நிர்ணயிக்கிறார்கள். இது நியாயத்தின் எல்லைக்குள் இல்லை.

கோவிட் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .தொடர்ந்து அதிகமானால் முடிதிருந்தும் வேலைக்கு தடைவரும். முடிதிருத்துபவர் மூலம் கொரோனா தொற்று பரவியிருப்பதும் இதற்குக் காரணமாக இருப்பதால் தடையின் தூரம் அருகிலேயே இருக்கிறது.

 

திருத்தப்பட்ட செய்தி

நேற்று வெளியிடப்பட்ட இச்செய்தியை சிகை அலங்கார தொழிலாளர்களை புண்படுத்தும் வகையில் நமது செய்தியாளர் பதிவிட்டிருந்த பகுதிகளை நீக்கியிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். –  மக்கள் ஓசை ஆன்லைன் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here