அரசு மருத்துவமனைகளில் உள்ள கிளினிக்குகளில் அதிகரித்து வரும் நோயாளிகள் எண்ணிக்கையை சமாளிக்கவும் நிறைவான சேவை வழங்கவும் இரண்டு சிப்ட் வேலை முறையை பரிச்சார்த்தமாக அறிமுகம் செய்ய சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்று அதன் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்
இரண்டு சிப்ட் முறையை அமலாக்கம் செய்ய போதுமான மனித ஆற்றல், அந்த பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான உரிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் உட்பட பல அம்சங்களை உறுதி செய்ய வேண்டும். அது தொடர்பான ஆய்வுகளும் பரிசார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலில் சில கிளினிக்குகளில் இரண்டு சிப்ட் வேலை முறையை அறிமுகப்படுத்தி, அதன் சாதக, பாதகங்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கப்படும். இந்த முறையை முழுமையாக அமலாக்கம் செய்வதற்கு முன்னர் சுகாதார அமைச்சு கியுபெக் பொறுப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்