ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? – நடிகை அமலாபால்

நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது திரை உலகை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுஷாந்த்சிங் மறைவு குறித்து ஏராளமான பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

அமலாபாலின் இந்த பதிவில் சுஷாந்த்சிங் பெயர் இல்லை என்றாலும் சுஷாந்த்சிங் மரணமடைந்த ஒரு சில மணி நேரத்தில் அவர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதால் சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து தனது எண்ணத்தை அவர் தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here