தாமான் கோ லங்காட், தாமான் லங்காட் முர்னி ஆகிய இடங்களில் அமலில் இருந்த நிர்வாக முறையிலான நடமாட்டக் கட்டுபாடு இன்றுடன் நிறைவு பெற்றது.
கோல லங்காட் நில அதிகாரி முகமட் ஜுஸ்னி அஷிம் கூறுகையில் இவ்வட்டாரங்களில் மொத்தம் 4,697 குடியிருப்பாளர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
அதில் மொத்தம் 9 பேருக்கும் மட்டுமே கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் எழுவர் மலேசியர்கள், இருவர் அந்நிய நாட்டினர் ஆவர். அவர்கள் அனைவரும் தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி இவ்வட்டாரங்களில் முன்வேளிகள் போடப்பட்டன. தற்போது தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.