பினாங்கு, பத்து ஃபிரிங்கி கடற்கரையில் 40 ஆண்டுகளாக கம்பீரமாக செயல்பட்டு வந்த ஹோலிடே இன் ஹோட்டல், தங்களது சேவையை ஜுன் 30 ஆம் தேதியோடு முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
பத்து ஃபிரிங்கி சாலைக்கு மேல் இணைப்பு பாலம் அமைத்து இரண்டு கட்டிடங்களுடன் செயல்பட்டு வந்த ஹோட்டலின் 40 ஆண்டுகால சேவை இம்மாத இறுதியோடு நிறைவு பெறுகிறது.
197 தொழிலாளர்கள் நலனை காக்கும் வகையில் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று ஹோட்டல், பார், உணவக பணியாளர் தேசிய சங்கத்தின் பினாங்கு மாநில செயலாளர் அபு முகமட் அபு பைடா தெரிவித்தார்.
கோவிட் 19 தொற்றினால் மிக மோசமான பாதிக்கப்பட்ட துறைகளில் ஹோட்டல் துறையாகும். நாட்டின் மிக முக்கிய சுற்றுப்பயணத் தளங்களில் பினாங்கும் அடங்கும். இதற்கு முன்னர் பினாங்கில் பல ஹோட்டல் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது.