ம.இ.கா வசம் இருக்கும் தாப்பாவை தன் வசப்படுத்த பெர்சத்து போராடுமா?

ம.இ.கா வசம் இருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியான தாப்பா, பெர்சத்து கட்சி வசப்படுத்த போராடுமா? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. 15 பொதுத் தேர்தலில் ம.இ.கா ஒன்பது தொகுதிகளில் போட்டியிடும். அவசியம் ஏற்பட்டால் தொகுதி பறிமாற்றத்தை ம.இ.கா ஏற்றுக் கொள்ளும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்ணேஸ்வரன் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ எம். சரவணன் 16,086 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து செர்சத்து கட்சி சார்பில் போட்டியிட்ட முகமட் அஸ்னி முகமட் அலி 15,472 வாக்குகளையும் பாஸ் கட்சி வேட்பாளர் 4,616 வாக்குகளையும் பெற்றனர்.

தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தற்போது இந்த மூன்று வேட்பாளர்களும் ஒரே அணியில் பயணிக்கிறார்கள். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட பெர்சத்து தாப்பா தொகுதிக்கு குறிவைக்குமா?

தாப்பா தொகுதியில் ம.இ.கா. சார்பில் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன், டான்ஸ்ரீ க.குமரன், டான்ஸ்ரீ வீரசிங்கம், டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் அதிகமான மலாய் வாக்காளர்கள் இருக்கும் தாப்பா தொகுதி அம்னோவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற ம.இ.கா தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கான வெற்றி வாய்ப்பை இழந்த டத்தோஸ்ரீ சரவணனுக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வி ம.இ.கா அரசியலில் அள்ளி தெளிக்கப்பட்டிருந்த நேரத்தில், சரவணன் தான் எங்களுக்கு வேட்பாளராக வேண்டும் என தாப்பா அம்னோ தீர்மானம் நிறைவேற்றியது. வெற்றி பெறவும் செய்தனர்.

அம்னோவின் அந்த ஆதரவு நிலைக்குமா? அல்லது பெர்சத்து கரம் ஓங்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here