சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் நடிகை அனுஷ்கா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியபோது “எல்லோரும் நிறைவானவர்கள் என்பது இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கின்றனர். இதுதான் சரி இதுதான் தவறு என்பதும் இல்லை. வாழ்க்கையை நடத்த நாம் பிறக்கும்போதே வரைபடத்தோடு பிறக்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் அவரவர் வழிகளில் நடக்கின்றனர்.
சிலர் உதவி கேட்பார்கள். சிலர் உள்ளுக்குள் உடைந்து போவார்கள். சிலர் அழுது விடுவார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலருக்கு உதவிகள் கிடைப்பது இல்லை. சிலர் அவரவர் வழியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கனியோடு இருக்கவும் கற்றுக்கொள்வோம். விட்டுக்கொடுக்கவும் மற்றவர்கள் மீது அன்பு காட்டவும் கற்றுக்கொள்வோம். மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் பிறருடன் உரையாடவும் வலுவாக இருக்கவும் பலகீனமாக இருக்கவும் கற்றுக்கொள்வோம்.
உள்ளே எப்படி உணர்கிறோமோ அதை வெளியே மற்றவர்களுக்கும் சொல்லலாம். நாம் மனிதர்கள் சிரிப்பு, கேட்க காது, நேர்மையான தொடுதல் போன்றவை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது சரி செய்யவும் முடியாது. ஆனால் ஒரு சிறிய அடி எடுத்து வைத்தாலும் பெரிய மாற்றம் வரும்.” இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.