கத்தோலிக்க பெருமக்களின் கண்ணியம்

கத்தோலிக்க திருச்சபை  மிகுந்த முன்னெச்சரிக்கையோடு ஓர் அறிவிப்பைச் செய்திருந்தது.  இந்த அறிவிப்பு, தங்களுக்கான் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அம்மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம்?

தலைவர் சொல்லே தக்கவர் சொல்லாக மதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. தலைமை சொல்வதை மதிப்பது மரியாதைக்குரிய பண்பாகும்.

அரசாங்கம், பாதுகாப்பை முன்னிறுத்தியே சுகாதார நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. சுகாதார நடவடிக்கை என்பது உயிர்த் தொடர்பானது. அதனால்தான் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை தளர்வுவரை எந்த நடவடிக்கையையும் கத்தோலிக்கச் சபை மேற்கொள்ளாது என்ற அறிவிப்பை பாதுகாப்பு நடவடிக்கை கருதி செய்திருந்தது.

அவர்கள், வீட்டிலிருந்த படியே அனைத்தையும் மேற்கொள்ள கத்தோலிகக்கச் திருச்சபை அனுமதித்தது. ஆதரவும் வழங்கியது. வழங்கியும் வருகிறது.

இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள், 12 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களின் நலன் கருதி, திருச்சபை நிகழ்ச்சிகளில் அனுமதியில்லை என்று அறிவித்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கோலாலம்பூர் கத்தோலிக்கத் தேவாலயங்களின் பேராயர்கள் மன்றம் இதனைத் தெரிவித்திருக்கிறது. அவசரத்தால் தவறுகள் நடந்துவிடக்கூடாது. தவற்றால்  இழப்புகள் நேர்ந்துவிடக்கூடாது. இழப்புகள் ஏற்படும்முன் அறிவிப்பூர்வமாக செய்வது சாலச்சிறந்தது. அதை கத்தோலிக்கத் திருச்சபை செய்திருக்கிறது.

எஸ்.ஓ.பி அணுகுமுறையில் நான்கு நிபந்தனைகள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கானது. அதனைப் பின்பற்றுவது நாட்டின் சுகாதார நலனுக்குக்கு மிக அவசியமானதாகும் .

முடிவுகள் என்பது தனிமனித முடிவுகளாக இருக்கக்கூடாது. இயக்கம், சங்கம், அமைப்பு என்றாலும் ஒருமித்த முடிவுகளே எதிர்ப்பின்றி இருக்கும். அதற்கு உதாரணமாக விளங்கிகிறார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here