ஆலயங்கள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு
இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் குறிப்பாக இந்து ஆலயங்கள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை தேசிய ஒற்றுமை மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ வான் சுராயா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் ஆலயங்களைத் திறப்பதற்கான புதிய எஸ்.ஒ.பிக்கள் வரைப்பட்டு வருவதாகவும், விரைவில் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் வழங்கப்பட்டு அனுமதி கிடைத்த பிறகே பச்சை மற்றும் மஞ்சல் மண்டலங்களில் உள்ள ஆலயங்களைத் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று டத்தோ வான் சுராயா தெரிவித்தார்.
மேலும் ஆலயங்களுக்கு வழங்கப்படும் நிபந்தனைகளை கண்டிப்பாக அவை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இரு வார காலக்கெடுவுக்குள் ஆலயங்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.